கன்டோன்மென்ட் வாரியங்களை உள்ளாட்சியுடன் இணைக்க அரசு ஒப்புதல்
குன்னூர்; மத்திய பாதுகாப்பு அமைச்சக கட்டுப்பாட்டில் உள்ள, வெலிங்டன் மற்றும் பல்லாவரம் கன்டோன்மென்ட் வாரியங்களை, அருகில் உள்ள உள்ளாட்சிக்கு ஒப்படைக்கும் முடிவுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நம் நாட்டில் உள்ள, 62 கன்டோன்மென்ட் வாரிய சிவில் நடவடிக்கைகள், அந்தந்த மாநில அரசின் உள்ளாட்சிக்கு ஒப்படைக்க கடந்த, 2022ல் ஆண்டில், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்தது.
இதன்படி, தமிழகத்தில் நீலகிரியில், வெலிங்டன், சென்னையில் பல்லாவரம் கன்டோன்மென்ட் வாரியங்களை, மாநில அரசின் உள்ளாட்சியில் இணைப்பு நடவடிக்கை தொடர்பான முழு திட்ட விபரங்களுடன், மத்திய அரசு, மாநில அரசுக்கு, 2024 பிப் 2ல், கடிதம் அனுப்பியது. அதில், மத்திய அரசு குறிப்பிட்ட செயல் திட்டங்களை ஏற்று கொண்டது.
தொடர்ந்து, அந்தந்த வாரியம் அருகே உள்ள சிவில் நடவடிக்கைகள் அனைத்தையும், மாநில அரசுடன் இணைக்கும் ஒப்புதல் கடிதத்தை மாநில அரசு, மத்திய பாதுகாப்பு அமைச்சக துணை இயக்குனர் உட்பட கன்டோன்மென்ட் வாரிய முதன்மை நிர்வாக அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளது.
இது குறித்து, வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி வினீத் பாபா சாகிப் லோட்டே கூறுகையில், ''இது ஆரம்ப கட்டத்தில் கடித போக்குவரத்து மட்டுமே நடந்து வருகிறது. மற்றவை விபரங்கள் பிறகுதான் தெரியவரும்,'' என்றார்.
மேலும்
-
போலீஸ் பிடியில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்துக்கு விஜய் ஆறுதல்
-
நீலகிரி கலெக்டர் படத்தை பயன்படுத்தி வாட்ஸ் அப் வாயிலாக பணம் மோசடி
-
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா
-
மாணவன் மீது போலீஸ் தாக்குதலா... விசாரணை...: நெல்லையில் பரபரபரப்பு
-
ஐகோர்ட் மதுரைக்கிளை எழுப்பிய கேள்விக்கு இதுவரை பதில் வரவில்லை; சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு
-
இந்திய வம்சாவளி பெண் கொலை : பிரிட்டனில் 23 வயது வாலிபர் கைது