நேற்று லஞ்சம் வாங்கி சிக்கியவர்கள் பட்டியல் இதோ!

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மல்லியில் மாரிமுத்து என்பவரின் வீட்டுமனையை சப் டிவிஷன் செய்து பட்டா மாற்றம் செய்து தர ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கனகராஜை 34,லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
சர்வேயர் கைது
சிவகாசியை சேர்ந்தவர் மாரிமுத்து, இவருக்கு ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா மல்லி வருவாய் கிராமத்தில் வீட்டு மனை உள்ளது. இதனை சப் டிவிஷன் செய்து பட்டா மாற்றம் செய்யக் கோரி ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா அலுவலகத்தில் மே மாதம் விண்ணப்பித்திருந்தார்.
இதற்கு தாலுகா அலுவலக சர்வேயர் கனகராஜ் என்பவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டு, பின்னர் அதனை ரூ.7ஆயிரமாக குறைத்து முடிவில் ரூ.5 ஆயிரம் வேண்டுமென கூறியுள்ளார். விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் மாரிமுத்து புகார் செய்தார்.
நேற்று முன்தினம் லஞ்சம் கொடுக்க மாரிமுத்து வரும் போது நாளை வா என கனகராஜ் திருப்பி அனுப்பியுள்ளார். நேற்று காலை 11:30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சர்வேயர் அலுவலகத்தில் வைத்து லஞ்சம் வாங்கும் போது கனகராஜை, ஏ.டி.எஸ். பி. ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், யாஸ்மின் மும்தாஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
மின் வாரிய அதிகாரி சிக்கினார்
சென்னை, மணப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர், தன்னுடைய இடத்தில் வணிக பயன்பாட்டிற்காக புதிதாக ஆறு கடைகள் கட்டியுள்ளார். இக்கடைகளுக்கு வணிக ரீதியிலான மின் இணைப்பு கோரி, மணப்பாக்கம் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
விண்ணப்பத்தை பரிசீலனை செய்து, மின் இணைப்பு வழங்க வணிக ஆய்வாளர் அண்ணாமலை என்பவர், ஒவ்வொரு மின் இணைப்பிற்கும் தலா, 2,500 ரூபாய் வீதம், 15,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக தினேஷ்குமார், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையில் புகார் அளித்தார். அதன்படி, நேற்று லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் திட்டமிட்டு, ரசாயன பவுடர் தடவிய, 15,000 ரூபாயை தினேஷ்குமாரிடம் கொடுத்து அலுவலகத்திற்குள் அனுப்பினர்.
அந்த பணத்தை லஞ்சமாக பெற்ற அண்ணாமலை, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார். இதையடுத்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.









மேலும்
-
இந்திய வம்சாவளி பெண் கொலை : பிரிட்டனில் 23 வயது வாலிபர் கைது
-
சாட் ஜிபிடியை நம்பக்கூடாது': உருவாக்கியவரே சொல்கிறார்
-
மடப்புரம் சம்பவத்தில் நீதியை பெற துணை நிற்போம்: இ.பி.எஸ்.,
-
திருப்புவனம் வழக்கில் திடீர் திருப்பம்; புகார் தந்த டாக்டர் மீது மோசடி வழக்கு; பின்னணி விவரம்!
-
புதிய தலாய்லாமாவை தேர்வு செய்ய எங்கள் அனுமதி வேண்டும்: சொல்கிறது சீனா
-
தொடர் தோல்வி எதிரொலி:இந்திய கால்பந்து தலைமை பயிற்சியாளர் மனோலோ மார்க்வெஸ் பதவி விலகல்