சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை பயன்படுத்த அழைப்பு

பெங்களூரு; ''கழிவு நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை பயன்படுத்த அனைவரும் முன்வர வேண்டும்,'' என, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம் பிரசாத் மனோகர் கூறினார்.
பெங்களூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
கழிவு நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை பயன்படுத்த அனைவரும் முன்வர வேண்டும். இதற்காக வீடுகள், நிறுவனங்களில் இரண்டாவதாக பைப்லைன் அமைக்கப்படும்.
இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். இத்திட்டத்தை துணை முதல்வர் சிவகுமார் ஊக்குவித்து வருகிறார்.
மக்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடியில் தண்ணீர் வழங்கப்படுகிறது. கடந்த 11 ஆண்டுகளில் மின்சார கட்டணம் பல முறை அதிகரித்து உள்ளது. ஆனால், குடிநீர் கட்டணம் ஒரு முறை மட்டுமே அதிகரித்து உள்ளது.
இந்த வாரியத்தில் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க, சூரிய மின்சக்தி பயன்படுத்தப்படுகிறது. 80 சதவீதம் சூரிய மின்சக்தியை பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
காவிரி நீர் பங்கீட்டின் மூலம் பெங்களூருக்கு ஆண்டுக்கு 35 டி.எம்.சி., வழங்கப்படுகிறது. இது, 1.50 கோடி மக்கள் வசிக்கும் பெங்களூரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யாது.
எனவே, மற்ற ஆறுகள், நீர் நிலைகளிலிருந்து தண்ணீர் பெறுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் 200 அடியிலிருந்து 1,000 அடியாக குறைந்து உள்ளது.
பெங்களூரு குடிநீர் வாரியம், இந்திய அறிவியில் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளது. சிங்கப்பூரில் வழங்கப்படும் 1 லிட்டர் தண்ணீரின் விலை, பெங்களூரு குடிநீர் வாரியம் வழங்கும் 1,000 லிட்டர் தண்ணீருக்கு சமம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
போலீஸ் பிடியில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்துக்கு விஜய் ஆறுதல்
-
நீலகிரி கலெக்டர் படத்தை பயன்படுத்தி வாட்ஸ் அப் வாயிலாக பணம் மோசடி
-
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா
-
மாணவன் மீது போலீஸ் தாக்குதலா... விசாரணை...: நெல்லையில் பரபரபரப்பு
-
ஐகோர்ட் மதுரைக்கிளை எழுப்பிய கேள்விக்கு இதுவரை பதில் வரவில்லை; சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு
-
இந்திய வம்சாவளி பெண் கொலை : பிரிட்டனில் 23 வயது வாலிபர் கைது