ஆர்.எஸ்.எஸ்., ஆபீஸ் முற்றுகை; இளைஞர் காங்கிரசார் கைது

சாம்ராஜ்பேட்டை; ஆர்.எஸ்.எஸ்., பொதுச் செயலர் தத்தாத்ரேயா ஹோசபெலே. இவர் சமீபத்தில் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது, 'அரசியலமைப்பின் முகவுரையில் சோசலிசம், மதச்சார்பற்ற என்ற வார்த்தை இருக்க வேண்டுமா?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதைவைத்து காங்கிரஸ் அரசியல் செய்கிறது. அரசியலமைப்பை அவமதித்து விட்டதாக பொங்கி எழுகின்றனர்.
இந்நிலையில், தத்தாத்ரேயா ஹோசபெலே கருத்தை கண்டித்து, பெங்களூரு சாம்ராஜ்பேட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தை முற்றுகையிட, நேற்று மாலை இளைஞர் காங்கிரசார் ஊர்வலமாக சென்றனர். ஆனால் அலுவலகம் உள்ள இடத்தில் இருந்து 200 மீட்டருக்கு முன்பே, போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தினர்.
போலீசாருடன், காங்கிரசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தடுப்புகளை அகற்ற முயன்றதால், அவர்கள் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்பட்டனர். சிறிது நேரத்தில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.