மறைந்த ஆர்.எஸ்.மனோகர் பிறந்தநாள்: நுாற்றாண்டு சிறப்பு காட்சி அரங்கேற்றம்

சென்னை: மயிலாப்பூரில், மறைந்த ஆர்.எஸ்.மனோகரின் பிறந்தநாள் நுாற்றாண்டு விழாவில், மனோகர் நடித்திருந்த நாடகங்களின் சிறப்பு காட்சிகள் அரங்கேற்றப்பட்டன.
மறைந்த ஆர்.எஸ்.மனோகரின் பிறந்தநாள் நுாற்றாண்டு விழா, மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபாவில், கடந்த மாதம் 29ம் தேதி நடந்தது.
இதில், மனோகர் நடித்திருந்த 'ராவணேஸ்வரன், சாணக்ய சபதம், காடக முத்தரையர், மாலிக்கபூர், துரோணர், திருநாவுக்கரசர்' ஆகிய நாடகங்களில் இருந்து சிறப்பு காட்சிகள் மட்டும், மீண்டும் அரங்கேற்றப்பட்டன.
இதில், ராவணேஸ்வரன், துரோணர் உள்ளிட்ட வேடங்களில் டாக்டர் எஸ்.சிவபிரசாத், ஆண்டாள், வேலுநாச்சியார், மீனவ பெண் செங்கமலம், சிவன், மதுரை மீனாட்சி மற்றும் வழக்கறிஞராக, 'கலைஇளமணி' எஸ்.ஸ்ருதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
நிகழ்ச்சியில், ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி, பத்மாசுப்பிரமணியம், ஆர்.ஆர்.சபா அறக்கட்டளை இயக்குநர் ஆர்.நாகராஜன், தொழிலதிபர் அனுப், நடிகை சச்சு, நடிகர்கள் கார்த்தி, நாசர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும், நாடக துறையில் பணியாற்றிய நாடக கலைஞர்களும் கவுரவிக்கப்பட்டனர்.
மேலும்
-
அரசு மானியம் ஆசை காட்டும் ஆசாமி: வேளாண் அதிகாரி எச்சரிக்கை
-
குழாய் உடைந்து குடிநீர் வீண்
-
பனியன் நிறுவன பஸ் மோதி அரசுப்பள்ளி மாணவி பலி
-
தி.மு.க.,வை வீழ்த்த அ.தி.மு.க., கூட்டணிக்கு யாரும் வரலாம்; விஜய் தீர்மானம் பற்றி பழனிசாமி விளக்கம்
-
காஞ்சியில் விதிமீறிய 220 வாகனங்களுக்கு ஒரே மாதத்தில் ரூ.15.70 லட்சம் அபராதம்
-
பி.எம்.சி., டெக் கல்லுாரி வளாகத்தில் இயங்கும் இந்திராகாந்தி பல்கலை.,யில் மாணவர் சேர்க்கை