தி.மு.க.,வை வீழ்த்த அ.தி.மு.க., கூட்டணிக்கு யாரும் வரலாம்; விஜய் தீர்மானம் பற்றி பழனிசாமி விளக்கம்

சென்னை: ''தி.மு.க., ஆட்சியை அகற்ற விரும்பும் யாரும் எங்கள் கூட்டணிக்கு வரலாம்; தி.மு.க.,வை வீழ்த்த எங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்,'' என, விஜய் கட்சி தீர்மானம் பற்றிய கேள்விக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பதில் அளித்திருக்கிறார்.
வரும், 2026 சட்டசபை தேர்தலுக்கு, இன்னும், 10 மாதங்கள் இருக்கும் நிலையில், ஆளும் தி.மு.க.,வும், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வும், முழுவீச்சில் தயாராகி வருகின்றன.
'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பிரசார இயக்கத்தை, ஜூலை 1ல் தி.மு.க., துவங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து, 'மக்களைக் காப்போம்; தமிழகத்தைக் காப்போம்' என்ற முழக்கத்தோடு, கோவை, மேட்டுப்பாளையத்தில், நாளை பிரசாரத்தை துவக்குகிறார் பழனிசாமி.
பிரசார பயணம்
இந்நிலையில், சென்னையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்த பிரசார பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை, பழனிசாமி வெளியிட்டார்.
அதில், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் சீனிவாசன், பொன்னையன், வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின், பழனிசாமி அளித்த பேட்டி:
நாளை மேட்டுப்பாளையத்தில் துவங்கி, 234 சட்டசபை தொகுதிகளுக்கும் பிரசார பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். தி.மு.க., ஆட்சியில், சிறுமி முதல் முதியோர் வரை, யாருக்கும் பாதுகாப்பு இல்லை.
பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி எல்லாம் நாள்தோறும் நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றை எல்லாம் மக்களிடம் அம்பலப்படுத்தி, அவர்களுக்கு மாற்றத்திற்கான நம்பிக்கையை விதைப்பதே என் பயணத்தின் நோக்கம்.
என் பயணத்தின் போது, கடந்த 50 மாத ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் பட்ட துன்பங்கள், கொடுமைகளை பட்டியலிட்டு காட்டுவோம்.
தி.மு.க.,வின் மக்கள் விரோத, கொடுங்கோல் ஆட்சியை அகற்றுவதே எங்களின் லட்சியம். எங்களது பிரசார பயணம், தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மக்களின் பேராதரவை அ.தி.மு.க., பெறும். வரும், 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., பெரும்பான்மை இடங்களில் வென்று, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
கடந்த, 2021 சட்டசபை தேர்தலின் போது, 525 வாக்குறுதிகளை கொடுத்து, தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. அதில், பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
இதையெல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்வோம். எந்த மாவட்டத்திற்கு செல்கிறோமோ, அந்த மாவட்டத்தின் பிரச்னைகளை முன்னிறுத்தியும் பிரசாரம் செய்வோம்.
எங்கள் பிரசார பயணத்திற்கு, கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். 2026 ஜனவரியில் மாநாடு நடத்தி, கூட்டணியை அறிவிப்பதாக, தே.மு.தி.க., தெரிவித்துள்ளது. அதனால், அவர்களை அழைக்கவில்லை.
கடந்த ஏப்ரல் 11ல், சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு அ.தி.மு.க., தலைமை வகிக்கும்; அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும். பழனிசாமி முதல்வர் வேட்பாளர்' என்று தெளிவாக கூறி விட்டார். அதன்பின்னும், அதுபற்றி திரும்ப திரும்ப கேள்வி கேட்பது தேவையற்றது.
பலமான கூட்டணி
அமித்ஷா கூறிய பின், அதற்கு அடுத்து யார் பேசினாலும் சரியல்ல. அ.தி.மு.க., கூட்டணியில், மேலும் சில கட்சிகள் இணையும். பலமான கூட்டணி அமைத்து, தி.மு.க.,வை வீழ்த்தி ஆட்சி அமைப்போம்.
சிவகங்கை மாவட்டத்திற்கு பயணம் செல்லும் போது, காவல் துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினரை சந்திப்பேன்.
அஜித்குமார் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, அ.தி.மு.க., சார்பில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அஜித்குமாரை தாக்க, காவல் துறையினருக்கு உத்தரவிட்ட உயர் அதிகாரி யார் என்பது, சி.பி.ஐ., விசாரணையில் தெரிய வரும்.
தேர்தல் வாக்குறுதிகளை இப்போதே சொல்வது சரியாக இருக்காது; தேர்தல் அறிக்கையில் அறிவிப்போம். வீடு வீடாகச் சென்று, கதவைத் தட்டி உறுப்பினர்கள் சேர்க்கும் அளவுக்கு, தி.மு.க., பரிதாப நிலையில் உள்ளது. அ.தி.மு.க., பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பின், வீட்டுக்கு வந்தால் ஸ்டாலினை வரவேற்போம். இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுக்கு ஒத்துழைப்பு
சென்னையில் சமீபத்தில், த.வெ.க., செயற்குழு கூட்டம் நடந்தது. அதில், தி.மு.க., - பா.ஜ.,வுடன் மட்டும் கூட்டணி இல்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை மையமாக வைத்தே, அக்கூட்டத்தில் த.வெ.க., தலைவர் விஜய் பேசினார். ஒரு வார்த்தை கூட, அ.தி.மு.க.,வையோ, அதனுடனான கூட்டணி பற்றியோ, அவர் வாய் திறக்கவில்லை.
இது விமர்சனத்தை ஏற்படுத்தியது. அ.தி.மு.க., கூட்டணிக்கான வாய்ப்பை, அவர் புறக்கணிக்க விரும்பவில்லை என்பதையே இது காட்டுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் சென்னையில் நேற்று பேட்டி அளித்த பழனிசாமியிடம், விஜய் கட்சி தீர்மானம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் அளித்த பதில்:
ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு முடிவு இருக்கும்; விமர்சனம் இருக்கும். அதை விஜய் செய்திருக்கிறார். தங்களை வளர்ப்பதற்காக எல்லா கட்சிகளும் விமர்சனம் செய்வது இயல்பு.
மக்கள் விரோத தி.மு.க.,வை அகற்ற வேண்டும் என்ற கருத்தில் உடன்பாடு உள்ள கட்சிகளுடன் கூட்டணி வைக்க, அ.தி.மு.க., விரும்புகிறது. தி.மு.க., ஆட்சியை அகற்ற விரும்பும் கட்சிகள், எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
@block_B@
பாதுகாப்பு ஏன்?''என் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக, பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையிலேயே, எனக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார் பழனிசாமி.block_B
அமித் ஷாவுக்கு
@block_B@
உள்ளான பிரசார பாடல்'புரட்சித் தமிழர் எழுச்சி பயணம், புயலா உருவாச்சே; பல வருஷம் கழிச்சு நினைச்ச கனவு நிஜமா நடந்தாச்சே; மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' போன்ற வரிகள், பழனிசாமி பிரசார பயண பாடலில் இடம்பெற்றுள்ளன. த.வெ.க., பாடல் துவங்கும் முன் வரும் இசையும், பழனிசாமி பிரசார பாடல் துவங்கும் முன் உள்ள இசையும் ஒன்றுபோல இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.block_B
பழனிசாமி பதிலடி
சென்னையில் பேட்டியளித்த பழனிசாமியிடம், '2026 சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். அதில் பா.ஜ., இடம் பெறும். அ.தி.மு.க.,விலிருந்து முதல்வர் வருவார்' என, கடந்த ஜூன் 27ல் அளித்த பேட்டியில், அமித்ஷா கூறியது பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு நேரடியாக பதிலளிக்காத பழனிசாமி, ஏப்ரல் 11ல் அமித்ஷா அளித்த பேட்டியை குறிப்பிட்டு, ''பெரும்பான்மை பலத்துடன், அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும். நான்தான் முதல்வர் வேட்பாளர்,'' என்றார்.
'தனித்து ஆட்சி, பழனிசாமி முதல்வர்' என, அ.தி.மு.க.,வினர் பேசி வரும் நிலையில், 'தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி' என, அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் சொல்கின்றனர். அதற்கு பதிலடியாக, ''நான் தான் முதல்வர் வேட்பாளர்; அ.தி.மு.க., ஆட்சி,'' என, பழனிசாமி கூறியதாக, அ.தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர். இரு கட்சிகளுக்கும் இடையே நெருடல் இருப்பதை, இந்த முரண்பாடு காட்டுவதாக சொல்லப்படுகிறது.
@block_B@
உள்ளான பிரசார பாடல்'புரட்சித் தமிழர் எழுச்சி பயணம், புயலா உருவாச்சே; பல வருஷம் கழிச்சு நினைச்ச கனவு நிஜமா நடந்தாச்சே; மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' போன்ற வரிகள், பழனிசாமி பிரசார பயண பாடலில் இடம்பெற்றுள்ளன. த.வெ.க., பாடல் துவங்கும் முன் வரும் இசையும், பழனிசாமி பிரசார பாடல் துவங்கும் முன் உள்ள இசையும் ஒன்றுபோல இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.block_B



மேலும்
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்; 8 அறைகள் தரைமட்டம்
-
பா.ம.க., நிர்வாக குழுவில் அன்புமணி நீக்கம்: புதிய குழுவை அறிவித்தார் ராமதாஸ்
-
இந்தியாவில் டாக்டராக பதிவு செய்வதில் சிக்கல்: வெளிநாட்டில் மருத்துவம் படித்த டாக்டர்கள் போராட்டம்
-
14 மருத்துவ கல்லுாரிகளின் 'டீன்'கள் நியமனத்தை தனி நீதிபதி ரத்து செய்தது சரியே: ஐகோர்ட் தீர்ப்பு
-
தலாய் லாமாவுக்கு 90வது பிறந்த நாள்; பிரதமர் மோடி வாழ்த்து
-
நாமக்கல் தம்பதி விபரீத முடிவு; போலீசார் விசாரணை