அரசு மானியம் ஆசை காட்டும் ஆசாமி: வேளாண் அதிகாரி எச்சரிக்கை

ஈரோடு, அரசு மானியம் பெற்றுதருவதாக வேளாண் துறை அலுவலர் போல் பேசும் ஆசாமியிடம், விவசாயிகள் மற்றும் மக்கள், பணம் மற்றும் ஆவணங்கள் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் தமிழ்செல்வி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை துறையில் பணிபுரிவதாக ஒரு மர்ம நபர், விவசாயிகள் மற்றும் மக்களை, மொபைல்போனில் தொடர்பு கொண்டு, அரசு சார்பில் மானியம், துறை சார்ந்த நலத்திட்டங்களுக்கு சலுகை பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தை கூறி, பணம் வசூலித்து வருவதாக தெரிகிறது. வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளில், மத்திய மற்றும் மாநில அரசின் எந்த ஒரு திட்டத்துக்கும், தனிப்பட்ட அலுவலரின் வங்கி கணக்கிற்கோ அல்லது அலுவலருக்கு ரொக்கமாகவோ தொகை பெறப்படுவதில்லை. போலி நபர்களிடம் தொகை மற்றும் வேறு வகையான ஆவணங்கள் வழங்கி ஏமாற வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement