தி.மு.க., எதிர்க்கட்சியாவதே நல்லது

கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், மேகதாது அணை கட்டுவதற்கான வேலைகள் துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் எதுவும் பேசவில்லை. அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிய பின்பே, அணையிலிருந்து பாதுகாப்பிற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. ஸ்டாலின் ஆட்சியில் தற்போது அணையில் 136 அடி தண்ணீர் வந்த உடனேயே பாதுகாப்பு கருதி அணைத் தண்ணீரை வெளியேற்றுகிறது கேரள அரசு. தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது.

தமிழகத்தில் விவசாயிகளுக்கான உரிமைகளை பாதுகாக்க வேண்டுமெனில், தி.மு.க., எப்போதும் எதிர்க்கட்சியாக இருப்பதே நல்லது.

பாண்டியன்

தலைவர், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு

Advertisement