'தமிழ்நாடு' தினத்தை முன்னிட்டு நாளை பேச்சு, கட்டுரை போட்டி
சேலம், 'தமிழ்நாடு' தினத்தை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் சேலம் மாவட்டத்தில், 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சு போட்டிகள் ஜூலை, 4ல்(நாளை) காலை, 9:00 மணிக்கு, சேலம், கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடக்க உள்ளது.'ஆட்சி மொழி வரலாற்றில் கீ.ராமலிங்கம், பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையாரின் தமிழ் ஆட்சி சொல் பணி' ஆகிய தலைப்புகளில் கட்டுரை போட்டிகள், 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு; அன்னைத்தமிழே ஆட்சி மொழி; அறிஞர் அண்ணா கண்ட தமிழ்நாடு; ஆட்சி மொழி விளக்கம்; தமிழ்நாடு என பெயர் சூட்டிய நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேச்சு போட்டி நடக்க உள்ளது.
இதில் பங்கேற்கும் மாணவர்கள், பள்ளி தலைமையாசிரியரின் பரிந்துரை கடிதம் பெற்று வர வேண்டும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு முறையே, 10,000 ரூபாய், 7,000, 5,000 ரூபாய் பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
மேலும்
-
குழந்தை பெறும் பள்ளி மாணவியருக்கு உதவி தொகை அளிக்கிறது ரஷ்யா
-
தி.மு.க.,வின் மொழிப்போர் மகாராஷ்டிராவில் போராட்ட சூறாவளியாக சுழன்றடிக்கிறது முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
'ஸ்மார்ட் மீட்டர்' திட்டம் என்னாச்சு ரூ.160 கோடியில் 11.50 லட்சம் சாதா மீட்டர் வாங்குது வாரியம்
-
சி.எஸ்.ஆர்., முறை ஒழிக்கணும் என்கிறார் பொன் மாணிக்கவேல்
-
ஒகேனக்கல்லில் 10வது நாளாக தடை
-
சிரவை ஆதீனம் மீதான வழக்கை ரத்து செய்யாவிட்டால் ஆர்ப்பாட்டம்