சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு தடை உயர் நீதிமன்றம் தடை

மதுரை : திருச்சி டி.ஐ.ஜி., வருண்குமார் மற்றும் குடும்பத்தினர் பற்றி சமூக வலை தளங்களில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர், அவதுாறாக கருத்து பதிவிட்டனர்.

இது தொடர்பாக, சீமான் மீது திருச்சி நீதிமன்றத்தில் வருண்குமார் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, அதே நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். அதை நீதிமன்றம் நிராகரித்தது.

இதையடுத்து, அந்த உத்தரவை ரத்து செய்து, வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சீமான் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி விக்டோரியா கவுரி, திருச்சி நீதிமன்றத்தில் சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தார்; வருண்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

Advertisement