ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் துவக்கம்: மக்களை வீடு வீடாக சென்று சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்!

17


சென்னை: ஓரணியில் தமிழ்நாடு பிரசார இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை ஆழ்வார் பேட்டையில் வீடுவீடாகச் சென்று முதல்வர் ஸ்டாலின் மக்களை சந்தித்தார்.

தி.மு.க., சார்பில் ஓரணியில் தமிழ்நாடு எனும் தலைப்பில், தமிழக முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தவும், தி.மு.க., அரசின் 4 ஆண்டுகால சாதனைகளை கூறவும், உறுப்பினர்களை சேர்க்கவும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தன் கட்சியினருக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று (ஜூலை 03) ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


சென்னை ஆழ்வார் பேட்டையில் வீடு வீடாகச் சென்று முதல்வர் ஸ்டாலின் மக்களை சந்தித்தார். சந்தித்த பெண்களிடம் எல்லாம், பஸ்களில் இலவச பயணம் செல்கிறீர்களா என்று கேட்டார்.
மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 208 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார மையங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.


@twitter@https://x.com/mkstalin/status/1940660739204960294twitter


வெல்லட்டும்






இது தொடர்பாக சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் மண், மொழி, மானம் காக்க, ஜாதி, மதம், அரசியல் கடந்து ஓரணியில் தமிழ்நாடு வெல்லட்டும்.


இதற்காக அடுத்த 45 நாட்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள் என அனைவரும் பிரசாரத்தில் ஈடுபட்டு, தமிழகத்தில் உள்ள அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement