ஜூலை 19ல் அனைத்துக்கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு

புதுடில்லி: ஜூலை 19ல் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரை வரும் ஜூலை 21 ல் முதல் ஆக., 21 வரை நடத்துவதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். சுதந்திர தினத்தை கருத்தில் கொண்டு ஆக., 13, 14 ஆகிய தேதிகளில் கூட்டத்தொடர் நடைபெறாது.
வரும் 21ம் தேதி காலை 11 மணிக்கு பார்லிமென்ட் கூட உள்ள நிலையில் இந்த தொடரில் விவாதங்கள் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தொடரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதிக்க திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், ஜூலை 19ல் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜூலை 21ம் தேதி பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மழைக்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது.

மேலும்
-
கிருஷ்ணகிரி அருகே சிறுவன் கடத்தி கொலை: 2 பேர் கைது
-
மடப்புரம் அஜித்குமாருக்கு கஞ்சா கொடுத்து தாக்குதல்: போலீஸ் மீது இன்னொரு குற்றச்சாட்டு!
-
விஷமாக்கப்படும் தென்பெண்ணை நதி
-
இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா? சென்னை ஐகோர்ட் கேள்வி
-
அ.தி.மு.க., நிர்வாகி தற்கொலைக்கு தி.மு.க.,வினர் சித்ரவதை தான் காரணம்: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு!
-
ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்கிறது: கானா பார்லி.,யில் பிரதமர் மோடி பெருமிதம்