திருவனந்தபுரத்தில் பழுதாகி 20 நாட்களாக நிற்கும் பிரிட்டீஷ் போர் விமானம்: சரக்கு விமானத்தில் கொண்டு செல்ல முடிவு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உலகின் மிகவும் காஸ்ட்லியான போர் விமானம், பழுது நீக்க முடியாததால் சரக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட உள்ளது.
திருவனந்தபுரம் அருகே நடுக்கடலில் பிரிட்டன் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான F-35B ரக விமானம், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தது. உலகின் மிக காஸ்ட்லியான, அதிநவீன போர் விமானமாக கருதப்படும் இந்த விமானத்தின் இந்திய ரூபாய் மதிப்பு ரூ.640 கோடி.
கடந்த ஜுன் 14ம் தேதி எரிபொருள் தீர்ந்து போனதால் இந்த விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.
பிரிட்டன் கடற்படை விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து இந்த விமானத்திற்கு தேவையான எரிபொருள் வழங்கப்பட்டது. எனினும் விமானத்தை மீண்டும் கிளப்பிச் செல்ல முடியவில்லை.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த போர் விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அதே இடத்தில் 20 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கோளாறை சரி செய்ய, சிங்கப்பூரில் இருந்தும் பிரிட்டனில் இருந்தும் வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.
கிட்டத்தட்ட 2 வாரங்கள் கடந்தும்,கோளாறை சரி செய்ய முடியவில்லை. எனவே, பிரிட்டனுக்கு விமானத்தை கொண்டு செல்ல வல்லுநர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக C 17 ராணுவ சரக்கு விமானம் வரவழைக்கப்பட உள்ளது.
F-35B போர் விமானம், குறிப்பிட்ட அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே உள்ளது. இந்தியாவில் இல்லை. அதில் இருக்கும் தொழில்நுட்பம், தாக்குதல் திறன் ஆகியவை, உலகில் மிகவும் மேம்பட்டதாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.







மேலும்
-
மடப்புரம் அஜித்குமாருக்கு கஞ்சா கொடுத்து தாக்குதல்: போலீஸ் மீது இன்னொரு குற்றச்சாட்டு!
-
விஷமாக்கப்படும் தென்பெண்ணை நதி
-
இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா? சென்னை ஐகோர்ட் கேள்வி
-
அ.தி.மு.க., நிர்வாகி தற்கொலைக்கு தி.மு.க.,வினர் சித்ரவதை தான் காரணம்: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு!
-
ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்கிறது: கானா பார்லி.,யில் பிரதமர் மோடி பெருமிதம்
-
இந்தியாவில் ஹாக்கி விளையாட பாக்., அணிக்கு மத்திய அரசு அனுமதி