போலீஸ் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த விவகாரம்; மனித உரிமை ஆணையம் விசாரணை

திருப்புவனம்: திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கை, தாமாக முன்வந்து விசாரணைக்கு தமிழக மாநில மனித உரிமை ஆணையம் எடுத்தது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஐகோர்ட் மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விசாரணையை தமிழக அரசு சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டு உள்ளது.
இந்நிலையில் இன்று (ஜூலை 03) இந்த வழக்கை, தாமாக முன்வந்து விசாரணைக்கு தமிழக மாநில மனித உரிமை ஆணையம் எடுத்தது. மரண வழக்கில், ஐ.ஜி.,க்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சம்பவம் தொடர்பாக, 6 வாரங்களில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க ஐ.ஜி.,க்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.






மேலும்
-
சட்டக் கல்லுாரி மாணவர்களுக்கு புதிய விடுதி எப்போது: முதல்வருக்கு இ.பி.எஸ்., கேள்வி
-
சமாஜ்வாதி எம்.எல்.ஏ.,தலைமறைவு: குற்றவாளியாக அறிவித்தது சிறப்பு கோர்ட்
-
இரண்டாவது டெஸ்ட்: இரட்டை சதம் விளாசினார் சுப்மன் கில்
-
கிருஷ்ணகிரி அருகே சிறுவன் கடத்தி கொலை: 2 பேர் கைது
-
மடப்புரம் அஜித்குமாருக்கு கஞ்சா கொடுத்து தாக்குதல்: போலீஸ் மீது இன்னொரு குற்றச்சாட்டு!
-
விஷமாக்கப்படும் தென்பெண்ணை நதி