மஞ்சள் நீராட்டு விழாவுக்கு வைத்திருந்த 200 சவரன் நகை: வீடு புகுந்து கொள்ளையடித்த கும்பல்

1

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு வைத்திருந்த 200 சவரன் நகைகளை மர்ம கும்பல் கொள்ளை அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


@1brஇதுபற்றிய விவரம் வருமாறு;


சங்கராபுரம் அருகே உள்ளது கடுவனூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கேசரி வர்மன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.


இந் நிலையில் சம்பவத்தன்று தமது 2வது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்காக வங்கி லாக்கரில் இருந்து 200 சவரன் நகைகளை எடுத்து வந்திருந்தார். தனிப்பட்ட வேலையாக அவர் சென்னை சென்றுவிட்டார்.


இந்த தருணத்தை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கேசரி வர்மன் வீட்டின் பின்பக்க கதவின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர், வீட்டில் இருந்தவர்களை மிரட்டி, அங்கிருந்த பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 200 சவரன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு சென்றுள்ளனர்.


வீட்டில் ஆட்கள் இருந்த போதே கத்தி முனையில் துணிகர கொள்ளை நிகழ்ந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement