நீதிபதி வீட்டில் பணக்குவியல்; பதவி நீக்கம் செய்வதற்காக விசாரணைக்குழு அமைக்கும் பணி துவக்கம்!

புதுடில்லி: நீதிபதி வீட்டில் பணக்குவியல் சிக்கிய விவகாரத்தில், நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணைக்குழு அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில், மார்ச் 14ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டனர். அப்போது, பாதி எரிந்த நிலையில், 500 ரூபாய் நோட்டுக்கட்டுகள் அங்கிருந்த மூட்டைகளில் கண்டெடுக்கப்பட்டன. இது தொடர்பான புகார்களை யஷ்வந்த் வர்மா மறுத்தார்.
இதுகுறித்து விசாரிக்க, மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்து, விசாரணையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றம் நிரூபணமானது. இதையடுத்து, அவரை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி பதவியை ராஜினாமா செய்யும்படி, யஷ்வந்த் வர்மாவை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. ஆனால் அதை ஏற்காமல் அவர் முரண்டு பிடித்தார்.
அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்றம், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவிநீக்கம் செய்ய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பரிந்துரைத்தது. இருப்பினும், பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை இதுவரை துவங்கவில்லை.
அதேசமயம், பார்லி., மழைக்கால கூட்டத்தில் யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வது குறித்து விசாரணை குழுவை மத்திய அரசு அமைக்க திட்டமிட்டுள்ளது.
விசாரணை குழு 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.







மேலும்
-
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் மனு: தள்ளுபடி செய்தது சிறப்பு கோர்ட்
-
கருணாநிதி வரலாற்றை திணிப்பதில் முதல்வர் குறி: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
சட்டக் கல்லுாரி மாணவர்களுக்கு புதிய விடுதி எப்போது: முதல்வருக்கு இ.பி.எஸ்., கேள்வி
-
சமாஜ்வாதி எம்.எல்.ஏ.,தலைமறைவு: குற்றவாளியாக அறிவித்தது சிறப்பு கோர்ட்
-
இரண்டாவது டெஸ்ட்: இரட்டை சதம் விளாசினார் சுப்மன் கில்
-
கிருஷ்ணகிரி அருகே சிறுவன் கடத்தி கொலை: 2 பேர் கைது