கேரளாவில் அரசு பஸ்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: கடைகளுக்குள் புகுந்து சேதம்

திருச்சூர்; கேரளாவில் அரசு பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 12 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர்.
குமுளியில் இருந்து கோழிக்கோடுக்கு அரசு பஸ் ஒன்று நேற்றிரவு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் நீண்ட உறக்கத்தில் இருந்தனர். அதே நேரத்தில் குன்னம்குளம் பகுதியில் இருந்து லாரி ஒன்றும் வந்து கொண்டிருந்தது.
நள்ளிரவு 1.30 மணியளவில் பன்னித்தடம் என்ற இடம் வரும் போது லாரியும், பஸ்சும் நேருக்கு நேர் மோதியது. இரு வாகனங்களின் முன்பகுதியும் அப்பளம் போல் நொறுங்கியது.
மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் அருகில் இருந்த கடைகளுக்கும் புகுந்தது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 12 பேர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களில் பஸ் டிரைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பன்னித்தடம் ஒரு முக்கிய வழித்தடம் ஆகும். கெச்சேரி, அக்கிக்காவு, வடக்கன்சேரி மற்றும் குன்னம்குளம் செல்வதற்கு இந்த வழி முக்கியமானதாகும்.
சாலைகள் முழுமையாக போடப்பட்டு விட்ட நிலையில் அதிவேகத்தில் இவ்வழியாக வாகனங்களை இயக்குவதே இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம் என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் மனு: தள்ளுபடி செய்தது சிறப்பு கோர்ட்
-
கருணாநிதி வரலாற்றை திணிப்பதில் முதல்வர் குறி: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
சட்டக் கல்லுாரி மாணவர்களுக்கு புதிய விடுதி எப்போது: முதல்வருக்கு இ.பி.எஸ்., கேள்வி
-
சமாஜ்வாதி எம்.எல்.ஏ.,தலைமறைவு: குற்றவாளியாக அறிவித்தது சிறப்பு கோர்ட்
-
இரண்டாவது டெஸ்ட்: இரட்டை சதம் விளாசினார் சுப்மன் கில்
-
கிருஷ்ணகிரி அருகே சிறுவன் கடத்தி கொலை: 2 பேர் கைது