கடத்த பதுக்கிய 30 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

1

நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 30 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாகை, சால்ட் ரோடு பகுதியில் உள்ள கல்லறை தோட்டம் அருகே, கடலோர பாதுகாப்பு குழும ஏ.டி.எஸ்.பி., சிவசங்கர் உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.



போலீசாரை பார்த்ததும், கடல் அட்டைகளை பதப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தப்பியோடினர். அங்கு, பதப்படுத்தப்பட்டு இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த, 30 கிலோ எடையுடைய கடல் அட்டைகளை, போலீசார் பறிமுதல் செய்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

வனத்துறையினர் கூறுகையில், 'குறிப்பிட்ட ஒரே இடத்தில் தொடர்ந்து கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. ஆனாலும், கடத்தல் நபர்களை கைது செய்யவில்லை. வழக்கு பதிந்து, கோர்ட்டுக்கு சென்று, நாங்கள் பதில் கூற வேண்டி உள்ளது' என்றனர்.

Advertisement