நடிகருக்கு 'போதை' சப்ளை செய்தவரின் கூட்டாளி கைது

சென்னை : நடிகர் கிருஷ்ணாவிற்கு போதை பொருட்கள் வினியோகம் செய்தவரின் கூட்டாளி கைது செய்யப்பட்டார்.

அரும்பாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார், கடந்த 30ம் தேதி 'வல்லவன்' ஹோட்டல் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது, 'மெத் ஆம்பெட்டமைன்' போதைப் பொருள் வைத்திருந்த அந்தோணி ரூபன், 29, தீபக்ராஜ், 25, ஆகிய இருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து,14.20 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருள், இரண்டு பைக், இரண்டு மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


மேலும் வழக்கில் தலைமறைவாக இருந்த விருகம்பாக்கத்தைச் சேர்ந்த இமமானுவேல் ரோஹன், 23, என்பவரை, தேடி வந்தனர். நேற்று அவரை கைது செய்த போலீசார், 2.50 கிராம் மெத் ஆம்பெட்டமைன், மொபைல்போனை பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில், இவர் நடிகர் கிருஷ்ணாவிற்கு போதை பொருட்கள் வினியோகம் செய்த கெவின் என்பவரின் கூட்டாளி என்பது தெரிய வந்தது.

Advertisement