டூ - வீலர் மோதி எரிந்த பஸ்; உயிர் தப்பிய பயணியர்

தேனி: தேனி அருகே வீரபாண்டி பைபாஸ் ரோட்டில் கம்பம் நோக்கி சென்ற தனியார் பஸ் மீது டூ - வீலர் மோதியதில் டூ - வீலர் மற்றும் பஸ்சின் முன்பகுதியில் தீப்பற்றியதால், பயணிகள் அலறி அடித்து இறங்கினர்.
மதுரையில் இருந்து தேனி வந்த தனியார் பஸ் நேற்று காலை, 52 பயணியருடன் கம்பம் நோக்கி சென்றது. தேனி அருகே உள்ள வீரபாண்டி பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே டூ - வீலரில் வந்த தேவாரம் எர்ணம்பட்டியை சேர்ந்த மைனரூதீன், 21, எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதாமல் இருக்க, டூ - வீலரை வலதுபுறமாக திருப்பினார்.
இதில் தனியார் பஸ்சில் டூ - வீலரில் மோதி, துாக்கி வீசப்பட்டார். சில விநாடிகளில் பஸ்சின் முன்பகுதியிலும், டூ - வீலரிலும் தீப்பற்றியது. பஸ்சில் இருந்த பயணியர் அலறி அடித்து இறங்கி ஓடினர். அதிர்ஷ்டவசமாக பயணியர் யாரும் காயமடையவில்லை. மைனரூதீன் காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டார்.
டூ - வீலர் முழுதும் எரிந்து சேதமான நிலையில், பஸ்சின் வலது புற முன்பகுதி மட்டும் சேதமடைந்தது. போடி தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
சிறுமியை திருமணம் செய்தவர் மீது 'போக்சோ' வில் வழக்கு பதிவு
-
விருத்தாசலத்தில் பதுக்கிய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
-
கோல மாவு மண் மூட்டை விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி: திண்டிவனம் அருகே சோகம்
-
அமெரிக்கா நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு; பயணிகள் அவதி
-
கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய வீரருக்கு பயிற்சியாளர் பதவி
-
கட்சி நிர்வாகிகளை நீக்க எனக்கே அதிகாரம்; ராமதாஸ் திட்டவட்டம்