கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய வீரருக்கு பயிற்சியாளர் பதவி

மும்பை: 2013 ஆம் ஆண்டு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஸ்பாட் பிக்சிங் ஊழலில் சிறைக்குச் சென்ற கிரிக்கெட் வீரர் அங்கீத் சவான் மும்பையின் 14 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் போகிறார்.
பிரிமியர் லீக் கிரிக்கெட் 2013 ஸ்பாட் பிக்சிங் ஊழல் இன்னும் இந்திய கிரிக்கெட்டின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த ஸ்பாட் பிக்சிங்கில் ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், அஜித் சந்திலா, அங்கீத் சவான் ஆகிய மூன்று வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை புரட்டி போட்டது.
இதே வழக்கில் சம்பந்தப்பட்ட ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அங்கீத் சவான், இப்போது மீண்டும் கிரிக்கெட் உலகிற்குத் திரும்புகிறார். இந்த முறை வீரராக அல்ல, பயிற்சியாளராகத் திரும்புகிறார். மும்பை கிரிக்கெட் சங்கம், சவானை 14 வயதுக்குட்பட்ட மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.
இடது கை சுழற்பந்து வீச்சாளர் அங்கீத் சவானுக்கு 2013ம் ஆண்டு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்தது. ஆனால் 2021ம் ஆண்டு இந்த தடை, ஏழு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. தற்போது மும்பையின் 14 வயதுக்குட்பட்டோர் அணியைப் பயிற்றுவிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
@quote@
"இது என் வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸ், அதற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்" என சவான் கூறியுள்ளார்.quote





மேலும்
-
சமாஜ்வாதி எம்.எல்.ஏ.,தலைமறைவு: குற்றவாளியாக அறிவித்தது சிறப்பு கோர்ட்
-
இரண்டாவது டெஸ்ட்: இரட்டை சதம் விளாசினார் சுப்மன் கில்
-
கிருஷ்ணகிரி அருகே சிறுவன் கடத்தி கொலை: 2 பேர் கைது
-
மடப்புரம் அஜித்குமாருக்கு கஞ்சா கொடுத்து தாக்குதல்: போலீஸ் மீது இன்னொரு குற்றச்சாட்டு!
-
விஷமாக்கப்படும் தென்பெண்ணை நதி
-
இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா? சென்னை ஐகோர்ட் கேள்வி