தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி; ஜூலை 5ல் மதுரை, சிவகாசி

மதுரை: பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தினமலர், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் 'தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி -2025' நிகழ்ச்சி, ஜூலை 5 மதுரை, சிவகாசி, ஜூலை 6ல் திண்டுக்கல், தேனி என இரண்டு நாட்கள் நடக்கின்றன.
ஜூலை 5 ல் மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் மதியம் 3:00 - 6:00 மணிக்கும், சிவகாசியில் எஸ்.எப்.ஆர்., கல்லுாரியில் காலை 10:00- 1:00 மணிக்கும், இரண்டாம் நாளில் திண்டுக்கல்லில் தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள பி.வி.கே., ஹாலில் மதியம் 3:00 - 6:00 மணிக்கும், தேனியில் பாரஸ்ட் ரோட்டில் உள்ள அன்னப்பராஜா மஹாலில் காலை 10:00 - 1:00 மணிக்கும் இந்நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
ஆண்டுதோறும் மாணவர்கள் நலன் கருதி பல்வேறு கல்வி நிகழ்ச்சிகளை தினமலர் நடத்துகிறது.
இதில் அண்ணா பல்கலையில் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த இன்ஜினியரியங் கவுன்சிலிங் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதனால் கலந்தாய்வு குறித்து தெளிவும், எவ்வாறு விண்ணப்பித்து பங்கேற்க வேண்டும் என்ற புரிதலும் மாணவர்கள், பெற்றோருக்கு ஏற்படுகிறது.
இதன் மூலம் ஆண்டுதோறும் ஏராளமான மாணவர்கள் பயனடைகின்றனர்.இதுதவிர இந்நிகழ்ச்சியில், இந்தாண்டு மாணவர்கள் பெற்றுள்ள 'கட் ஆப்' மதிப்பெண்ணுக்கு எந்த கல்லுாரியில் சேரும் வாய்ப்பு கிடைக்கும், ஆன்லைன் கவுன்சிலிங்கில் அறிந்துகொள்ள வேண்டிய அம்சங்கள் என்ன, சிறந்த கல்லுாரியை தேர்வு செய்வது எப்படி, கவுன்சிலிங்கில் புதிய மாற்றங்கள் என்ன, சரியான சாய்ஸ் பில்லிங் உட்பட தமிழ்நாடு இன்ஜி., கவுன்சிலிங் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் அதிகாரிகள், நிபுணர்கள் நேரடி விளக்கம் அளிக்க உள்ளனர்.
இத்துடன் 'வாய்ப்பு மிகுந்த இன்ஜினியரிங் பிரிவுகள்' என்ற தலைப்பில் கல்வி ஆலோசகர் அஸ்வின் நான்கு இடங்களிலும் பேசுகிறார்.
'ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த தகவல்கள்' என்ற தலைப்பில் திருச்சி அரசு பொறியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் காளிதாஸ், சிவகாசியிலும் மதுரையிலும் பேசுகிறார்.
இந்நிகழ்ச்சியை கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆப் இன்ஜி., ஆகியன இணைந்து வழங்குகின்றன.
மேலும்
-
தலாய் லாமாவால் மட்டுமே வாரிசை தேர்வு செய்ய முடியும்; சீனாவின் எதிர்ப்புக்கு இந்தியா பதிலடி
-
ஜூலை 19ல் அனைத்துக்கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு
-
திருவனந்தபுரத்தில் பழுதாகி 20 நாட்களாக நிற்கும் பிரிட்டீஷ் போர் விமானம்: சரக்கு விமானத்தில் கொண்டு செல்ல முடிவு
-
போலீஸ் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த விவகாரம்; மனித உரிமை ஆணையம் விசாரணை
-
முதல்வர் சித்தராமையா அறைய முயன்ற காவல் அதிகாரி விருப்ப ஓய்வு; பா.ஜ., கடும் விமர்சனம்
-
சுவை மிகுந்த உணவு கிடைக்குமிடம்; உலகின் டாப் 100 பட்டியலில் 6 இந்திய நகரங்கள்!