பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தின் 149வது ஆண்டு துவக்க விழா

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்திற்கு நேற்று 149வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ரயிலில் வந்த பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

பரங்கிப்பேட்டை ரயில் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் துவக்கப்பட்டது. தற்போது, இந்த ரயில் பாதை வழியாக எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பரங்கிப்பேட்டையை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், தனியார் அனல்மின் நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் பயனடைந்து வருகின்றனர்.

பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்திற்கு நேற்று 149 வது ஆண்டு துவக்க விழா பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் சார்பில் கொண்டாடப்பட்டது. பயணியர் நலச்சங்கத் தலைவர் அருள்முருகன் தலைமை தாங்கி, ரயில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பொருளாளர் ஜமால் நாசர், செயலாளர் கணேசமூர்த்தி, நிர்வாகிகள் முகம்மது தாகா, வசந்த்,கப்பார்கான், சதாம் உசேன், முகம்மது ஹனிபா, சரவணன், ஷாஹூல் ஹமீது உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement