கலிபோர்னியாவில் பட்டாசு கிடங்கில் பயங்கர வெடி விபத்து: உள்ளே சிக்கிய 7 பேரை மீட்க முயற்சி தீவிரம்

1

கலிபோர்னியா; அமெரிக்காவில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



இதுபற்றிய விவரம் வருமாறு:


வடக்கு கலிபோர்னியாவில் யோலோ கவுண்ட்டியை அடுத்த எஸ்பார்டோ பகுதியில் பட்டாசு கிடங்கு ஒன்று உள்ளது. இந்த கிடங்கில் எதிர்பாராத விதமாக வெடி விபத்து நிகழ்ந்தது.


அப்போது பலத்த சத்தத்துடன் வானில் 100க்கான அடி உயரத்துக்கு கரும்புகை எழுந்தது. இதை கண்ட பலரும் அதிர்ந்தனர். வெடி விபத்து அதன் அருகில் இருந்த விளைநிலங்களை பாதித்தது. அங்குள்ள விளைநிலங்கள் முற்றிலும் சேதம் அடைய, அங்கே வசித்து வந்தவர்களும் உடடினயாக வெளியேற்றப்பட்டனர்.


தகவலறிந்த மீட்புக்குழுவினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். ட்ரோன்கள் மூலமாகவும் அங்குள்ள நிலைமைகளை கலிபோர்னியா வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.


இந்த பயங்கர வெடிவிபத்தில் 7 பேரை காணவில்லை என்ற முதல்கட்ட விவரம் வெளியாகி இருக்கிறது. இவர்கள் அனைவரும் பட்டாசு கிடங்கு பணியாளர்களா அல்லது அருகில் வசிப்பவர்களா என்ற தகவல்கள் வெளியாகவில்லை.


விபத்து எப்படி நடந்தது என்று தெரியவில்லை. விபத்தினால் அங்கு கடுமையான வெப்பம் நிலவுகிறது. அதன் தாக்கம் தணிந்த பின்னரே நிலைமைகளை ஆய்வு செய்ய முடியும் என்று மீட்புக்குழுவினர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

Advertisement