டிரம்புக்கு எதிராக குரல் கொடுத்த ஒபாமா: மருத்துவ மசோதாவை நிராகரிக்க வலியுறுத்தல்

வாஷிங்டன்: டிரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் ஓட்டளிக்க வேண்டும் என்று அமெரிக்க மாஜி அதிபர் பராக் ஓபாமா வலியுறுத்தி உள்ளார்.
அமெரிக்க அதிபரானது முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகள், நடவடிக்கைகளை எடுத்து வரும் டிரம்ப், தற்போது வரிகுறைப்பு மசோதா ஒன்றை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார். பிக் பியூட்டிபுல் என்ற பெயர் கொண்ட இந்த மசோதாவுக்கு அந்நாட்டு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆனால், மசோதாவுக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதே தருணத்தில் நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில், மருத்துவ உதவி நிதியை குறைக்கும் மசோதாவை மெடிக் எய்ட் (medic aid) என்ற பெயரில் டிரம்ப் கொண்டு வந்துள்ளார்.
இந்த மசோதாவுக்கு அமெரிக்க மாஜி அதிபர் பராக் ஒபாமா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு;
மசோதாவை அவை நிறைவேற்றினால் அது செலவுகளை அதிகரிக்கும். அடுத்த தலைமுறையினருக்கும், தொழிலாளர் வர்க்க குடும்பங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இன்றே உங்கள் பிரதிநிதியை இந்த மசோதாவை எதிர்த்து ஓட்டளிக்கச் சொல்லுங்கள்.
இவ்வாறு ஒபாமா பதிவிட்டுள்ளார்.
மேலும்
-
மடப்புரம் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு மிரட்டல்: பாதுகாப்பு தர திருமாவளவன் வலியுறுத்தல்
-
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 82 பேர் பலி
-
ஹேக் ஆனது மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் சமூக வலைதளம்
-
கார் விபத்தில் போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா பலி: திருமணமாகி 2 வாரத்தில் சோகம்!
-
அஜித்குமார் கொலை வழக்கு; வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு
-
போலீசாரை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது வெட்கக்கேடு; முதல்வரை கடுமையாக சாடிய சீமான்!