சமாஜ்வாதி எம்.எல்.ஏ.,தலைமறைவு: குற்றவாளியாக அறிவித்தது சிறப்பு கோர்ட்

மவ்: குற்ற வழக்குள்ள சமாஜ்வாதி, எம்.எல்.ஏ.,வான சுதாகர் சிங், தலைமறைவு குற்றவாளி என்று மவ்வில் உள்ள சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்தது.


உ.பி.,யில் கடந்த 1986 ஆம் ஆண்டு மின்வெட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும், அரசுப் பணிகளைத் தடுத்ததாகவும் தொடரப்பட்ட 40 ஆண்டு வழக்கில், கோசி தொகுதி எம்.எல்.ஏ.,வான சுதாகர் சிங், ஜூலை 25, 2023 அன்று தலைமறைவான குற்றவாளியாக மவ் மாவட்ட நீதிமன்றம் அறிவித்தது. ஆரம்பத்தில், இந்த வழக்கு அசாம்கர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது, அப்போது அசாம்கர் மாவட்ட நீதிமன்றம் சிங்கிற்கு ஜாமீன் வழங்கியது.
1989 ஆம் ஆண்டு மவ் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்ட பிறகு, இந்த வழக்கு மவ் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.

சிறப்பு நீதிமன்ற விசாரணையில்,சுதாகர் சிங்கின் வழக்கறிஞர் வீரேந்திர பகதுார் பால் வாதத்தின்போது, எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுதாகர் சிங் கடந்த ஜூன் 4, 2024 அன்று மாவட்ட நீதிபதியிடம் மேற்பார்வை மனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் இந்த வழக்கு சிறப்பு எம்.பி./எம்.எல்.ஏ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

கைது வாரண்ட் முறையாக நிறைவேற்றப்படவில்லை என்றும், நீதிமன்றத்தின் தலைமறைவு அறிவிப்பு குறித்து சுதாகர் சிங்கிற்கு தெரியாது. ஆகவே இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது என்றார்.

அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் ராஜேஷ் பாண்டே வாதிடுகையில்,

சட்ட நடவடிக்கைகள் குறித்து சிங் முழுமையாக அறிந்திருந்தார், நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்க மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்திடம் ரூ.2,000 அபராதம் செலுத்தியுள்ளார் என தெரிவித்தார்.

அதற்கு வீரேந்திர பகதுார் பால்,மாவட்ட நீதிமன்றத்தின் தலைமறைவு உத்தரவை நீதிமன்றம் தடை செய்ய மறுத்ததை உறுதிபடுத்தினார்.

இந்நிலையில் சிறப்பு நீதிமன்றம் சுதாகர் சிங், தலைமறைவு குற்றவாளி என்பதை உறுதி செய்து,இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் என்று உத்தரவிட்டது.

Advertisement