குத்துச்சண்டை: அரையிறுதியில் சாக்சி

அஸ்தானா: கஜகஸ்தானில் உலக கோப்பை குத்துச்சண்டை தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 70 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஹிதேஷ் குலியா, கஜகஸ்தானின் அல்மாஸ் மோதினர். சமீபத்திய பிரேசில் போட்டியில் தங்கம் வென்ற ஹிதேஷ், இம்முறை 5:0 என ஒரு மனதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி, பதக்கத்தை உறுதி செய்தார்.
பெண்களுக்கான 48 கிலோ காலிறுதியில் இந்தியாவின் மீனாட்ஷி, சீன தைபேவின் இ-ஜுவான் குவோவை 5:0 என வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினார்.
பெண்களுக்கான 54 கிலோ காலிறுதியில் இந்தியாவின் சாக்சி, பிரேசிலின் டாட்யனா ரெஜினாவை எதிர்கொண்டார். இதில் சாக்சி, 5:0 என வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
தவிர அனாமிகா (51), பூஜா ராணி (80), சஞ்சு (60) தங்களது காலிறுதியில் வென்று, அரையிறுதிக்கு முன்னேறினர்.

Advertisement