இளம் இந்திய அணி வெற்றி

நார்த்தாம்ப்டன்: இங்கிலாந்து சென்றுள்ள 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி, 5 போட்டி கொண்ட யூத் ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டி முடிவில் தொடர் 1-1 என இருந்தது. மூன்றாவது போட்டி நார்தாம்ப்டனில் நடந்தது. மழை காரணமாக போட்டி தலா 40 ஓவர்களாக குறைக்கப்பட்டன. 'டாஸ்' வென்ற இந்தியா 'பீல்டிங்' தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணிக்கு டாகின்ஸ் (62), இசாக் (41) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. மேயஸ் (31), ஆல்பர்ட் (21) உதவினர். கேப்டன் தாமஸ் ரியு (76) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து அணி 40 ஓவரில் 268/6 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் கனிஷ்க் 3 விக்கெட் சாய்த்தார்.
வைபவ் விளாசல்
இந்திய அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி, கேப்டன் அபிக்யான் (12) ஜோடி துவக்கம் தந்தது. சிக்சர் மழை பொழிந்த வைபவ், 20 பந்தில் அரைசதம் கடந்தார். இவர் 31 பந்தில் 86 ரன் (9x6, 6x4) எடுத்து அவுட்டானார். கனிஷ்க் (43*), அம்ப்ரிஸ் (31*) அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். இந்திய அணி 34.3 ஓவரில் 274/6 ரன் எடுத்து, 4 விக்கெட்டில் வெற்றி பெற்றது. தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது.
'சிக்சர்' வைபவ்
யூத் ஒருநாள் அரங்கில் (19 வயது) ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என வைபவ் (9) சாதனை படைத்தார். முன்னதாக மன்தீப் சிங் (எதிர்-ஆஸி., 2009) 8 சிக்சர் அடித்து இருந்தார்.
மேலும்
-
காட்சிப்பொருளாக குடிநீர் சுத்திகரிப்பு கருவி; பள்ளி மேலாண்மைக்குழுவினர் அதிருப்தி
-
குன்றத்து கோயில் கும்பாபிஷேக யாகசாலை பூஜையில் 150 சிவாச்சாரியார்கள் பங்கேற்பு: இன்று பூர்வாங்க பூஜை
-
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் கைது
-
சிறுவாணி அணையின் நீர்மட்டம் 44.61 அடியாக உயர்த்த வலியுறுத்தல்
-
ரயில் பாதையில் கடந்த ஆண்டு பைக் ஓட்டிய கோவை இளைஞர்; தற்போது தேடி வரும் ரயில்வே போலீசார்
-
உக்ரைனில் இலக்குகளை அடையும் வரை போரில் இருந்து ரஷ்யா பின்வாங்காது; அதிபர் டிரம்பிடம் புடின் திட்டவட்டம்