பிரக்ஞானந்தாவை வென்றார் குகேஷ்

ஜாக்ரெப்: கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசன் (மொத்தம் 5 தொடர்) தற்போது நடக்கிறது. இதன் மூன்றாவது தொடர் குரோஷியாவில் நடக்கிறது. உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். முதலில் 'ரேபிட்' முறையில் போட்டி நடக்கிறது.
முதல் நாளில் 3 சுற்று நடந்தன. முதல் சுற்றில் குகேஷ், போலந்தின் ஜான் டுடாவிடம் தோல்வியடைந்தார். பின் சுதாரித்த குகேஷ், அடுத்த சுற்றில் பிரான்சின் அலிரேசாவை வென்றார். 3வது சுற்றில் குகேஷ்-பிரக்ஞானந்தா மோதினர். கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய குகேஷ், 38 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
முதல் 3 சுற்று முடிவில் கார்ல்சன் (4.0), ஜான் டுடா (4.0), அமெரிக்காவின் வெஸ்லே (4.0), குகேஷ் (4.0) 'டாப்-4' இடங்களில் உள்ளனர். முதல் இரு சுற்றில் 'டிரா' செய்த பிரக்ஞானந்தா (2.0) கடைசி இடத்தில் (10) உள்ளார்.
மேலும்
-
169 பேருக்கு பணி நியமன உத்தரவு
-
அமலுக்கு வருகிறது டிரம்ப்பின் வரி குறைப்பு மசோதா; அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு நிம்மதி
-
'கடனை முன்கூட்டியே செலுத்தினால் கட்டணம் வசூலிக்க கூடாது': வங்கிகளுக்கு தடை விதித்தது ரிசர்வ் வங்கி
-
பெரியப்பாவை கொன்றவர் கைது
-
கோஷம் போட்டா வேற மாதிரி ஆகிடும்; மறியலில் ஈடுபட்டோரை எச்சரித்த விருதுநகர் எஸ்.பி.,
-
பழநியில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்