ஆஸ்திரேலிய அணி திணறல் துவக்கம்

செயின்ட் ஜார்ஜ்: வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்டில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்று 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் நேற்று செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் துவங்கியது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங் தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு கான்ஸ்டாஸ், கவாஜா ஜோடி வேகமான துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 10.3 ஓவரில் 47 ரன் எடுத்த போது, கவாஜா (16) அவுட்டானார். அடுத்த சில நிமிடத்தில் கான்ஸ்டாஸ் (25), பிலிப் பந்தில் வீழ்ந்தார். ஸ்டீவ் ஸ்மித் (3) வந்த வேகத்தில் நடையை கட்டினார்.
கேமரான் கிரீன் தன் பங்கிற்கு 26 ரன் எடுத்து, சீலஸ் பந்தில் அவுட்டானார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 125 ரன் எடுத்திருந்தது. வெஸ்ட் இண்டீசின் அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட் சாய்த்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
169 பேருக்கு பணி நியமன உத்தரவு
-
அமலுக்கு வருகிறது டிரம்ப்பின் வரி குறைப்பு மசோதா; அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு நிம்மதி
-
'கடனை முன்கூட்டியே செலுத்தினால் கட்டணம் வசூலிக்க கூடாது': வங்கிகளுக்கு தடை விதித்தது ரிசர்வ் வங்கி
-
பெரியப்பாவை கொன்றவர் கைது
-
கோஷம் போட்டா வேற மாதிரி ஆகிடும்; மறியலில் ஈடுபட்டோரை எச்சரித்த விருதுநகர் எஸ்.பி.,
-
பழநியில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்
Advertisement
Advertisement