விமானி வராததால் விமானம் தாமதம்
சென்னை, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, நேற்று முற்பகல் 11:40 மணிக்கு, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' பயணியர் விமானம், 162 பயணியருடன் பாட்னா புறப்பட்டு செல்ல இருந்தது.
இந்த நிலையில் நிர்வாக காரணங்களால், தாமதமாக புறப்பட்டு செல்லும் என, அறிவிக்கப்பட்டது. இதனால், அதிகாரிகளிடம் பயணியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, மதியம் 1:00 மணிக்கு பின், பயணியர் அனைவரும் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டு, 1:33 மணிக்கு, விமானம் புறப்பட்டு சென்றது.
விசாரணையில், விமானி வராத காரணத்தால் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதை, இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement