பரங்கிமலை புனிததோமையார் சர்ச் உலக புகழ் பெற்றதாக அறிவிப்பு

சென்னை,பரங்கிமலையில் உள்ள புனித தோமையார்மலை சர்ச், உலக புகழ்பெற்ற சர்ச்சாக, வாடிகனுக்கான இந்திய துாதர் லியோ போல்டோ ஜெரேலி, நேற்று அறிவித்தார்.
பரங்கிமலையில் உள்ள புனித தோமையார் மலை சர்ச் பழமை வாய்ந்தது. இதன், 500வது ஆண்டு விழா, 2023ல் கொண்டாடப்பட்டது.
இந்த சர்ச்சை உலக புகழ் பெற்ற சர்ச்சாக, போப் அறிவித்தார். இதற்கான விழா, நேற்று மாலை நடந்தது.
விழாவில், வாடிகனுக்கான இந்திய துாதர் லியோ போல்டோ ஜெரேலி பங்கேற்று, புனரமைக்கப்பட்ட புனித தோமையார்மலை சர்ச்சை, உலக புகழ் பெற்றதாக அறிவித்தார். இது தொடர்பான சிறப்பு மலரை அவர் வெளியிட, சபாநாயகர் அப்பாவு பெற்றுக் கொண்டார்.
விழாவில், அமைச்சர்கள் அன்பரசன், நாசர், ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு பாட நுால் கழக தலைவர் லியோனி மற்றும் பாதிரியார்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புனித தோமையார் பெருவிழா, இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கி, வரும் 6ம் தேதி வரை நடக்கிறது.
மேலும்
-
169 பேருக்கு பணி நியமன உத்தரவு
-
அமலுக்கு வருகிறது டிரம்ப்பின் வரி குறைப்பு மசோதா; அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு நிம்மதி
-
'கடனை முன்கூட்டியே செலுத்தினால் கட்டணம் வசூலிக்க கூடாது': வங்கிகளுக்கு தடை விதித்தது ரிசர்வ் வங்கி
-
பெரியப்பாவை கொன்றவர் கைது
-
கோஷம் போட்டா வேற மாதிரி ஆகிடும்; மறியலில் ஈடுபட்டோரை எச்சரித்த விருதுநகர் எஸ்.பி.,
-
பழநியில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்