கிணற்றில் தவறி விழுந்த குதிரை மீட்பு

மேடவாக்கம்,கிணற்றில் தவறி விழுந்த குதிரையை, தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.

மேடவாக்கம், சவுமியா நகர், 9வது குறுக்கு தெருவில் சுற்றித்திரிந்த குதிரை, அப்பகுதியில் உள்ள 10 அடி ஆழமுள்ள உறை கிணற்றின் உள்ளே விழுந்துள்ளது. அதன் சத்தம் கேட்டு, அங்கிருந்தோர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

மேடவாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள், சம்பவ இடத்திற்கு வந்து, அரைமணி நேரம் போராடி குதிரையை மீட்டனர்.

Advertisement