' போக்சோ ' கவுன்சிலிங் மையம் திறப்பு

சென்னை, பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், போக்சோ கவுன்சிலிங் மையம், நேற்று திறக்கப்பட்டது.

பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 'தளராத தளிர்கள்' என்ற பெயரில், போக்சோ கவுன்சிலிங் மையம், நேற்று திறக்கப்பட்டது.

இம்மையத்தை, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் திறந்து வைத்தார்.

இம்மையம் குறித்து, கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி பேசியதாவது:

போக்சோ உள்ளிட்ட பிரச்னைகளில் பாதிக்கப்படும் குழந்தைகள், பெண்களுக்கு உரிய மனநல ஆலோசனைகள் வழங்க, இம்மையம் உதவியாக இருக்கும்.

பாலியல் ரீதியாக அணுகும் ஆண்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள தேவையான ஆலோசனை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement