மாநகராட்சி 4வது வார்டில் சாக்கடை இல்லாமல் அவதி

ஈரோடு, ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், மாநகராட்சி முதலாவது மண்டல அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது. மனு விபரம்:

மாநகராட்சி நான்காவது வார்டு தண்ணீர்பந்தல்பாளைம் ரோட்டில் ஒருபுறம் மட்டுமே சாக்கடை கட்டப்பட்டுள்ளது. இதனால் மறுபுறத்தில் உள்ள வீடு, கடைக்காரர்கள், கழிவுநீரை முறையாக வெளியேறாமல் துர்நாற்றம் வீசுகிறது. மழை காலங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலை மற்றும் தாழ்வான இடங்களில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இப்பகுதியில் தேங்கியுள்ள சாக்கடை கழிவுகளை அகற்றி, மற்றொரு புறமும் சாக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement