கிடப்பில் கோதுார் சாலை பணி விரைந்து முடிக்க கோரிக்கை


கரூர் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோதுாரில், சாலை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் மாநகராட்சி பகுதியில், தார்ச்சாலை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், 1வது வார்டுக்குட்பட்ட கோதுாரில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. நீண்ட நாள்களாக குண்டும் குழியுமாக இருந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். தற்போது தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில், ஜல்லிகள் கொட்டிய நிலையில் மற்ற பணிகள் எதுவும் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால் இச்சாலை வழியாக செல்ல முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். பள்ளி வாகனங்கள், இரண்டு சக்கர வாகனங்கள் செல்வோர் தவித்து வருகின்றனர்.
இதுபோன்ற முக்கிய இடங்களில் உடனடியாக சாலை அமைக்க வேண்டும். ஆனால், ஜல்லி கற்களை நிரப்பிய பின், பல நாட்கள் கிடப்பில் போட்டு விட்டு சென்று விடுகின்றனர். மக்கள் நலன் கருதி சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement