தனிப்படை போலீசார் 20 பேர் மாற்றம்

விழுப்புரம்: டி.ஜி.பி., உத்தரவையொட்டி, மாவட்டத்தில் 5 டி.எஸ்.பி.,க்கள் கீழ் இருந்த 20 தனிப்படை போலீசார் கலைக்கப்பட்டு, மீண்டும் போலீஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார், 27; கோவில் காவலாளியான இவரை, தனிப்படை போலீசார், விசாரணை என்ற பெயரில் அடித்து, சித்ரவதை செய்ததில், அவர் இறந்தார்.

இந்நிலையில், மாநிலம் முழுதும் எஸ்.பி.,க்கள் மற்றும் டி.எஸ்.பி.,க்கள் என பல்வேறு நிலைகளில் உள்ள போலீஸ் அதிகாரிகளின் கீழ் செயல்பட்டு வரும் தனிப்படைகளை கலைத்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் 5 டி.எஸ்.பி.,க்கள் கீழ் இருந்த 20 தனிப்படை போலீசார் கலைக்கப்பட்டனர்.

அவர்கள் ஏற்கனவே இருந்த போலீஸ் நிலையங்களுக்கு மீண்டும் மாற்றப்பட்டனர்.

Advertisement