புகார் பெட்டி..

தெரு விளக்குகள் எரியவில்லை



முத்தியால்பேட்டை, கணேஷ் நகர் முதல் தெருவில் ஒரு வாரமாக மின் விளக்குகள் எரியவில்லை.

குப்புசாமி, முத்தியால்பேட்டை.

தெருவிளக்கு சீரமைக்கப்படுமா?



உருளையன்பேட்டை, முல்லை நகர், சோழன் வீதியில் தெரு விளக்குகள் தெருவை நோக்கி இல்லாமல் சாய்ந்துள்ளது.

சவுந்திரவதி, உருளையன்பேட்டை.

கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு



முத்தியால்பேட்டை, சூரியகாந்தி நகர் முதல் தெருவில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

ஹேமா, முத்தியால்பேட்டை

கழிவுநீர் வாய்க்கால் சிலாப் சேதம்



லாஸ்பேட்டை, தாகூர் நகர் 3வது மெயின் ரோடு, 10வது குறுக்குத் தெருவில் வாய்க்கால் சிலாப் உடைந்து, கழிவுநீர் தேங்கியுள்ளது.

நாகராஜன், லாஸ்பேட்டை.

கொசு தொல்லை அதிகரிப்பு



தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பகுதியில் கொசு தொல்லை அதிகரித்துள்ளதால், கொசு மருந்து தெளிக்க வேண்டும்.

குபேந்திரன், தட்டாஞ்சாவடி.

நாய்களால் தொல்லை



நைனார்மண்டபத்தில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோரை தெரு நாய்கள் துரத்துவதால் விபத்து அபாயம் உள்ளது

வெற்றிகுமார், நைனார்மண்டபம்.

Advertisement