கிரிக்கெட் போட்டி

பாகூர்: புதுச்சேரி கல்வித்துறை சார்பில், 3ம் வட்ட பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, பாகூர் பாரதி அரசுப் பள்ளியில் நடந்தது.

17 மற்றும் 19 வயதிற்குட்பட்டோர் பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. 17 வயது பிரிவில் நெட்டப்பாக்கம் கம்பன் அரசு பள்ளி அணி முதலிடம், சேலியமேடு கவிஞரேறு வாணிதாசனார் அரசு பள்ளி இரண்டாம் இடம், கிருமாம்பாக்கம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி மூன்றாம் இடம் பிடித்தன. 19 வயது பிரிவில், பாகூர் பேராசிரியர் அன்னுசாமி மேல்நிலைப்பள்ளி முதலிடம், பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடம் பெற்றன. வென்ற அணிகளை பள்ளி துணை முதல்வர் சுதா, உடற்கல்வி விரிவுரையாளர் தணிகைக்குமரன் பாராட்டினர்.

Advertisement