ஸ்கூட்டர் மீது பைக் மோதல் ஆசிரியர் உட்பட 3 பேர் காயம்
பாகூர்: பாகூர் அருகே நடந்த விபத்தில் உடற்கல்வி ஆசிரியர் உட்பட மூவர் காயமடைந்தனர்.
பாகூர் அடுத்த சேலியமேடு டி.என்.பாளையம் வீதியை சேர்ந்தவர் தனஞ்செழியன், 27. இவரது மனைவி புவனேஷ்வரி 25; வில்லியனுாரில் உள்ள தனியார் பள்ளி உடல் கல்வி ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் மதியம் பள்ளியில் இருந்து புறப்பட்டு தனது ஸ்கூட்டரில், விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
ஆதிங்கப்பட்டு சந்திப்பில் வலது பக்கமாக திரும்பிபோது, கடலுாரில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற யமாகா எம்.டி 15. பைக், ஸ்கூட்டர் மீது மோதியது.
இதில், படுகாயமடைந்த புவனேஷ்வரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அதேபோல், விபத்து ஏற்படுத்திய பைக்கை ஓட்டி வந்த நல்லாத்துார் பகுதியை சேர்ந்த ராம்குமாரும், அவருடன் வந்த நண்பர் தீபக், 18, ஆகியோரும் காயமடைந்தனர். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
பா.ஜ., அடுத்த தேசிய தலைவர் யார்: பெண்கள் மூவருக்கு வாய்ப்பு!
-
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 4 பேர் பலி; 16 பேர் காயம்
-
உடனடியாக பதவி விலகி சென்று விடுங்கள் அமெரிக்க வங்கி தலைவரிடம் டிரம்ப் காட்டம்
-
மின்சாரம் பாய்ந்து மாணவர் பலியான சம்பவம்: அதிர்ஷ்டவசமாக தப்பிய 20 குழந்தைகள்
-
இந்தியாவுக்கு 500 சதவீத வரி விதிக்க உள்ளதா அமெரிக்கா? : ஜெய்சங்கர் பதில்
-
இந்திய வம்சாவளியினர் கலாசாரம், பாரம்பரியத்தின் தூதர்கள்; பிரதமர் மோடி பெருமிதம்