மாணவர்களுக்கு சீருடை வழங்கல்

அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கம் அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகளை, பாஸ்கர் எம்.எல்.ஏ., வழங்கினார்.

புதுச்சேரியில் பள்ளிக் கல்விதுறை சார்பில், மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, முருங்கப்பாக்கம் அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினராக பாஸ்கர் எம்.எல்.ஏ., மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கி, பேசினார்.

நிகழ்ச்சியில், வட்ட துணை ஆய்வாளர் செல்வி, தலைமை ஆசிரியர் குணா உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement