கடத்துாரில் தார்சாலை பணி

கள்ளக்குறிச்சி: கடத்துார் ஊராட்சியில் ரூ.75.64 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியை உதயசூரியன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

சின்னசேலம் அடுத்த கடத்துார் ஊராட்சியில், முதல்வரின் கிராம சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ், முயல்குன்று பகுதியில் 75.64 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி துவக்க விழா நடந்தது. உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.

ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன் முன்னிலை வகித்தார். இதில் பி.டி.ஓ., சுமதி, ஒன்றிய பொறியாளர் அருண்பிரசாத், ஊராட்சி தலைவர் பேபி அய்யாசாமி, தி.மு.க., ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் ஆற்றல்அரசன், ஊராட்சி தலைவர் ஜோதிபன்னீர், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் மணி, அன்பழகன், அய்யாவு, நிர்வாகிகள் சக்திவேல், பாரதி, இளையராஜா, துரை செல்வன், அன்புராஜ், தமிழரசி, சரசு உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement