லாரி மோதி வாலிபர் பலி

ஊத்துக்கோட்டை:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 22. நேற்று முன்தினம் தனது பஜாஜ் பைக்கில் திருவள்ளூர்அருகே, ஈக்காடு கிராமத்தில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டு இருந்தார்.

வெங்கல் அருகே சென்று கொண்டு இருந்த போது, சவுடு மண் ஏற்றிக் கொண்டு வந்த லாரி இவர் மீது மோதியது. பலத்த காயம் அடைந்த அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து வெங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement