மணல் திருடிய இருவர் கைது

தேனி: தேனி கருவேல்நாயக்கன்பட்டி தெற்குப் பகுதியில் மணல் திருடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

எஸ்.ஐ.,இளங்குமரன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ஜூலை 1ல் ரோந்து சென்றனர். அப்போது குன்னுார் மேற்குத்தெரு ராஜபிரபு 21, அதேப்பகுதி மேற்குத் தெரு சேகர் 25, கிழக்குத்தெரு ரமேஷ் 25, ஆகிய மூவர் 2 டயர் மாட்டு வண்டிகளில் தலா அரை யூனிட் ஆற்று மணலை திருடிச் சென்றனர். போலீசாரை கண்டதும், ரமேஷ் தப்பி ஓடினார். மற்ற இருவரும் கைது செய்யப்பட்டனர். ஒரு யூனிட் மணல், 2 மாட்டு வண்டிகள் கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement