கல்லுாரி முதல்வரை மிரட்டிய தந்தை, மகன் மீது வழக்கு
போடி: போடி குப்பழகிரி தோட்டம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சூர்யா 20. இவர் போடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ., படித்துள்ளார். இவரது தந்தை சரவணன் நேற்று முன் தினம் கல்லூரிக்கு சென்று தனது மகனின் மதிப்பெண் சான்றிதழை கேட்டுள்ளார். சம்பந்தப்பட்ட மாணவரிடம் மட்டுமே தர முடியும் என அலுவலர் கூறினார்.
அதன் பின் சரவணன் கல்லூரி முதல்வர் சிவக்குமார் அறைக்குள் அழைந்து மதிப்பெண் சான்றிதழை கேட்டுள்ளார். முதல்வர் தர மறுத்ததால், ஆத்திரம் அடைந்த சரவணன் அவரை தகாத வார்த்தையால் பேசி மிரட்டி உள்ளார்.
அதன் பின் சூர்யா கல்லூரி முதல்வரை அலைபேசியில் தகாத வார்த்தையால் பேசி உள்ளார். கல்லுாரி முதல்வர் சிவக்குமார் புகாரில் போடி டவுன் போலீசார் சரவணன், சூர்யா மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 சரிவு
-
வெப்ப அலை ஐரோப்பிய மக்கள் தவிப்பு
-
நடிகர் - நடிகையருக்கு 'கோகைன்' விற்றோம்: கடத்தல் புள்ளி கெவின் வாக்குமூலத்தால் சிக்கப்போவது யார்?
-
ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு சிறப்பான வரவேற்பு; கர்நாடக சங்கமும் கவுரவிப்பு
-
பா.ஜ., அடுத்த தேசிய தலைவர் யார்: பெண்கள் மூவருக்கு வாய்ப்பு!
-
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 4 பேர் பலி; 16 பேர் காயம்
Advertisement
Advertisement