சான்றிதழ் வழங்கும் விழா

தேனி: கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள கனரா வங்கி சுயதொழில் வேலைவாய்ப்பு மையத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, கனரா வங்கி 120வது நிறுவன தினவிழா நடந்தது.

கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். அலைபேசி பழுது நீக்குதல், காளான் வளர்ப்பு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பயிற்சி மைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. மைய இயக்குனர் ரவிக்குமார் விழாவை ஒருங்கிணைத்தார்.

Advertisement