மூதாட்டிக்கு தொல்லை; பெயின்டருக்கு 'கம்பி'

1

தொப்பூர்; மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெயின்டர் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த மேல்பூரிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் காளியம்மாள், 65. இவரது கணவர் இறந்த நிலையில், வீட்டில் தனியாக வசித்தார். நேற்று முன்தினம் காலை, 10:30 மணிக்கு வீட்டிலிருந்த காளியம்மாளுக்கு, வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

உடல்நிலை பாதித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக, தொப்பூர் போலீசார், அதே பகுதியை சேர்ந்த பெயின்டர் சுரேஷ், 26, என்பவரை நேற்று கைது செய்தனர்.

Advertisement