தென்காசியில் அடுத்தடுத்து கைவரிசை

தென்காசி; ஆலங்குளம் அருகே ஆசிரியர் வீட்டில், 25 சவரன் நகைகள், 25,000 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம், பரும்பு பகுதியை சேர்ந்தவர் யோவான் மகன் திலீப்குமார், 32; குடும்பத்துடன் ஈரோட்டில் வசிக்கிறார்.
யோவான் வீட்டின் அருகே திலீப்குமாருக்கு தனி வீடு உள்ளது. யோவான், திலீப்குமார் வீட்டை சுத்தம் செய்வதற்காக நேற்று சென்றபோது, பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.
கடையம் போலீசார் ஆய்வு செய்ததில், மர்ம நபர்கள், மாடி வழியாக வீட்டுக்குள் இறங்கி பீரோவில் இருந்த, 25 சவரன் நகைகள், 25,000 ரூபாயை கொள்ளையடித்தது தெரிந்தது.
சில நாட்களுக்கு முன், ஆலங்குளம் அருகே அடைக்கலப்பட்டணம் பள்ளி உரிமையாளர் வீட்டிலும்,
இதேபோல், மாடி வழியாக வீட்டிற்குள் இறங்கி, 100 கிலோ நகை, 50 லட்சம் ரூபாயை ஒரு கும்பல் கொள்ளையடித்தது. இரண்டு கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பலா என போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
அமர்நாத் யாத்திரையில் திடீர் விபத்து: 5 பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் அதிர்ச்சி
-
உ.பி., யில் சோகம்! கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
-
நாட்டு வெடிகுண்டு தயாரித்து 'இன்ஸ்டா'வில் பதிவிட்ட 4 ரவுடிகள் கைது
-
தொழிற்சங்கம் போராட்டம் நடத்தினால் முதலீடு செய்ய யார் வருவர்: ஐகோர்ட் கேள்வி
-
சிறந்த சேவையாற்றியவர்களுக்கு விருது வழங்கி ஆசிர்வதித்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
-
பீஹாரில் தொழிலதிபர் கெம்கா வீட்டின் முன் சுட்டுக்கொலை!