ஆசிய பளுதுாக்குதல்: புங்னி தாரா 'வெள்ளி'

அஸ்தானா: ஆசிய யூத் பளுதுாக்குதலில் இந்தியாவின் புங்னி தாரா வெள்ளி வென்றார்.
கஜகஸ்தானில், ஆசிய யூத், ஜூனியர் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. யூத் பெண்களுக்கான 44 கிலோ பிரிவில் இந்தியாவின் புங்னி தாரா பங்கேற்றார். 'ஸ்னாட்ச்' பிரிவில் 60, 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 81 என, மொத்தம் 141 கி.கி., பளுதுாக்கிய புங்னி தாரா, 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார். தவிர, 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் அதிகபட்சமாக 81 கி.கி., பளுதுாக்கிய அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த புங்னி தாரா 17, தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

Advertisement