மீண்டது ஆஸ்திரேலிய அணி

செயின்ட் ஜார்ஜ்: வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்டில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்று 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடக்கியது. 'டாஸ்' வென்று களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, துவக்கத்தில் 110 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
பின் இணைந்த வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதம் அடிக்க, ஆஸ்திரேலிய அணி சரிவில் இருந்து மீண்டது.
6 வது விக்கெட்டுக்கு 112 ரன் சேர்த்த போது, கேரி (63) அவுட்டானார். கம்மின்ஸ் (17), ஸ்டார்க் (6) ஏமாற்ற, வெப்ஸ்டர் 60 ரன்னில் கிளம்பினார். கடைசியில் லியான் (11) அவுட்டாக, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 286 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அல்ஜாரி ஜோசப் 4 விக்கெட் சாய்த்தார்.
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராத்வைட் (0), கீஸ் கார்டி (6) 'ஷாக்' தந்தனர். கேம்பெல் 40 ரன் எடுத்தார். பிரண்டன் கிங் (52) அரைசதம் அடித்தார். முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 136/4 ரன் எடுத்து, 150 ரன் பின் தங்கி இருந்தது.